300 ஆண்டுகள் பழமையான குர்ஆன் அதிகாரிகள் ஆய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே நீடூரை சேர்ந்தவர் அமீனுல்லா (61). பல தலைமுறைகளாக நீடூரில் வசித்து வரும் இவரது குடும்பத்தினர், வெளிநாடுகளில் வேலை பார்த்து, வணிகம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் அமீனுல்லா வீட்டில் 300 ஆண்டு பழமையான 6,666 அத்தியாயங்களை 19 பக்கத்தில் அரபி மொழியில் எழுதப்பட்ட சிறிய அளவிலான குர்-ஆன் ஒன்று மெட்டல் பெட்டியில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த குர்ஆன் எந்த நூற்றாண்ட சேர்ந்தது என்று கண்டறிய சென்னை தொல்லியல்துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமை யிலான குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். நீதிமன்றம் உத்தரவின் பேரில் தற்போது ஆய்வு செய்ய வந்ததாகவும், இதுகுறித்து எவ்வித தகவலும் தெரிவிக்க முடியாது என அவர்கள் கூறி சென்றனர்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்