குவாரிகளின் செயல்பாட்டினை துல்லியமாக கண்காணிக்க புதிய வணிக மேலாண்மை மென்பொருள்உருவாக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று இயற்கை வளங்கள் துறை மானியகோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து 6 அறிவிப்புகளை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார். அறிப்புகள் பின்வருமாறு :

 தமிழ்நாடு கனிம நிறுவனத்தில்(டாமின்), ரூ.1 கோடி செலவில் புதிய வணிக மேலாண்மை மென்பொருள் உருவாக்கி, குவாரிகளின் செயல்பாட்டினை துல்லியமாக கண்காணிக்கவும், திறனாய்வு செய்யவும், புதிய திட்டங்களை தீட்டவும் ஏற்பாடு செய்யப்படும்.

 தமிழ்நாடு கனிம நிறுவனம் (டாமின்) மூலம் வேலூர் மாவட்டம், மகிமண்டலம் சுரங்கப்பகுதியில் ரூ.7 லட்சம் செலவில் 3000 மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து சுற்றுச்சூழல் மேம்படுத்தப்படும்.

 தமிழ்நாடு கனிம நிறுவனம் மூலம் ராணிப்பேட்டை மாவட்டம் ரெண்டாடி கிராமத்தில் ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடமும், ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை குடிநீர் தொட்டியும் அமைத்து தரப்படும்.

 தமிழ்நாடு கனிம நிறுவனத்தில் ரூ.12 லட்சத்தில் செயற்கை நுண்ணறிவு திறனுடன் இயங்கக்கூடிய கண்காணிப்பு புகைப்படக் கருவிகள் கொள்முதல் செய்யப்படும்.

 தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தில் (டான்மேக்) ரூ.40 லட்சத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது