கல்வியின் தரம் – 24 பேர் கொண்ட குழு அமைக்க உத்தரவு

சென்னை; கல்வியின் தரத்தை மேம்படுத்த மாவட்டந்தோறும் 24 பேர் கொண்ட குழு அமைக்க ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். ஆட்சியர் தலைமையில் எஸ்.பி., திட்ட இயக்குநர், நகராட்சி நிர்வாக ஆணையர், உள்ளிட்ட 24 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். கல்வி முறை மற்றும் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். பள்ளி உட்கட்டமைப்பு, கல்வி சார்ந்த சேவைகள் மற்றும் பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளார். மாணவர் சேர்க்கை, வருகை, பள்ளியில் இருந்து வெளியேறிய குழந்தைகள், பள்ளிக்கு வராத குழந்தைகள் பற்றி ஆலோசிக்க வேண்டும். ஹைடெக் லேப், தேர்வுகள், எண்ணும் எழுத்தும், இல்லம் தேடி கல்வி, வானவில் மன்றம், விழுதுகள் பற்றியும் ஆலோசிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை நீட்டிப்பு

பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளரின் மகன் கைது

தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது