புத்தூர் நகராட்சி தலைவர் பதவி தருவதாக கூறி ரூ.40 லட்சம் பெற்று மோசடி செய்ததாக அமைச்சர் ரோஜா சகோதரர் மீது குற்றச்சாட்டு: பெண் கவுன்சிலர் பேட்டியால் பரபரப்பு

திருமலை: ஆந்திரா மாநிலம் புத்தூர் நகராட்சி கவுன்சிலர் புவனேஸ்வரி கூறுகையில், புத்தூர் நகராட்சியில் 17 வது வார்டில் போட்டியின்றி வெற்றி பெற்றேன். எனக்கு நகராட்சி தலைவர் பதவியை வழங்குவதாக அமைச்சர் ரோஜாவின் அண்ணன் குமாரசாமி ₹70 லட்சம் கேட்டார். ஆனால் நான் ₹40 லட்சம் தந்தேன்.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை எனக்கு எவ்வித பதவியும் வழங்கவில்லை. இதுகுறித்து, அமைச்சர் ரோஜாவுக்கு தகவல் அனுப்பியும், நேரில் சென்று சந்தித்தும் எந்த பதிலும் இல்லை. பட்டியல் இன பெண்ணான எனக்கு நியாயம் கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

இரண்டு நாட்களாக காத்திருந்து 5 கூண்டு வைத்தும் சிக்காத சிறுத்தை

மாத்தூர் தொட்டி பாலத்தில் இருந்து குதித்தவர் கபடி வீராங்கனை

புரட்டாசி மாத பெளர்ணமி: சதுரகிரி மலைக் கோயிலில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!!