புடினுக்கு நெருக்கமான ரஷ்ய தொழில் அதிபருக்கு அமெரிக்காவில் 9 ஆண்டு சிறை

பாஸ்டன்: அமெரிக்க கணினியை ஹேக்கிங் செய்து ரூ.831 கோடி பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்ட புடினுக்கு நெருக்கமான ரஷ்ய தொழில் அதிபருக்கு அமெரிக்காவில் 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ரஷ்யாவில் மாஸ்கோவை தளமாகக் கொண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்துபவர் விளாடிஸ்லாவ் க்ளூஷின். அதிபர் புடினுக்கு நெருக்கமானவர் என்பதால் ரஷ்ய அரசின் உயர்பதவிகளில் பணிபுரிந்தார். மைக்ரோசாப்ட் மற்றும் டெஸ்லா உட்பட நூற்றுக்கணக்கான அமெரிக்க நிறுவனங்களுக்கான வருவாய் தொடர்பான ஆவணங்களை கணினி அமைப்புகளில் திருடி பங்குச்சந்தை அளவில் ரூ.831 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

அவர் சுவிட்சர்லாந்தில் வைத்து கைது செய்யப்பட்டு கடந்த 2021ம் ஆண்டு முதல் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2016ல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி கிளிண்டனின் பிரச்சாரத் தலைவரான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜான் பொடெஸ்டா உள்ளிட்ட முக்கிய ஜனநாயகக் கட்சியின் மின்னஞ்சல் கணக்குகளையும் ஹேக் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மோசடி தொடர்பான வழக்குகள் பாஸ்டன் நீதிமன்றத்தில் நடந்தன. அதில் ரஷ்ய தொழில் அதிபர் விளாடிஸ்லாவ் க்ளூஷினுக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது : சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.55,680-க்கு விற்பனை!!

முன்னாள் ஊழியரை தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு

பழனி பஞ்சாமிர்தம்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்