ரஷ்ய அதிபர் புதினின் அரசியல் எதிரியும் எதிர்க்கட்சி தலைவருமான அலெக்ஸி நவால்னிக்கு மேலும் 19 ஆண்டுகள் சிறை தண்டனை : ஐ.நா. கண்டனம்!!

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் புதினின் அரசியல் எதிரியும் எதிர்க்கட்சி தலைவருமான அலெக்ஸி நவால்னிக்கு மேலும் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா.மனித உரிமை அமைப்பு, அலெக்ஸி நவால்னியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. புதினின் ஊழல் நடவடிக்கைகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை தொடர்ந்து அலெக்ஸி நவால்னி பகீரங்கப்படுத்தி வந்தார். இதன் தொடர்ச்சியாக 2 ஆண்டுகள் முன் ஜெர்மனியில் ரஷ்ய ஏஜெண்டுகளின் விஷ ஊசி தாக்குதலுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

குணமடைந்த பிறகு ரஷ்யா திரும்பிய அவர், பரோல் விதிமுறைகளை மீறியது மற்றும் நீதிமன்ற அவமதிப்புகளின் கீழ் 2.5 ஆண்டு மற்றும் 9 ஆண்டு சிறை தண்டனைகளுக்கு ஆளானார். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அலெக்ஸி நவால்னி மீதான இதர வழக்கு விசாரணைகளில் ஒன்று நிறைவடைந்தது. அதன் தீர்ப்பு வெளியானது. அதில் அரசுக்கு எதிராக தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அவருக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் அரசியல் முறைகேடுகள் முதல் தனிப்பட்ட ஊழல்கள் வரை பலவற்றையும் அம்பலப்படுத்தியதிலும் புதின் ஆட்சிக்கு எதிராக போராடியதிலும் அலெக்ஸி நவால்னி சர்வதேச கவனம் பெற்றவர் ஆவார். எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா. மனித உரிமை அமைப்பு, அலெக்ஸி நவால்னியை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி உள்ளது.

Related posts

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!

மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்!

கொடைக்கானலில் தடையை மீறி டிஜே நிகழ்ச்சி; தனியார் விடுதியின் அரங்கத்துக்கு சீல்!