ப்யூஸ் போன பல்பு இல்ல சூப்பரான எல்இடி லைட்: விஜயதரணி தெம்பு

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜவில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் அவர் கோவைக்கு நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் வந்தடைந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, ‘உங்களை காங்கிரஸ் கட்சியினர் பியூஸ் போன பல்பு என கூறியுள்ளனரே?’ என நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த விஜயதாரணி, ‘‘காங்கிரஸ் கட்சியினர் என்னை எப்படி வேண்டுமனாலும் விமர்சிக்கட்டும். நான் ஒன்றும் ப்யூஸ் போன பல்பு இல்லை. நான் சூப்பராக எரியும் எல்இடி லைட். அதன் காரணமாகத்தான் இத்தனை மீடியாக்கள் என் முன் உள்ளது. என்னை விமர்சனம் பண்ணுவதை காட்டிலும் அவர்கள் கட்சியை வளர்த்து காட்டட்டும். அப்படி வளர்த்தால் மிகவும் சந்தோஷம். எதிர்க்கட்சி அந்தஸ்து காணாமல் போகும் அளவிற்கு காங்கிரஸ் கட்சி உள்ளது’’ என்றார்.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை