பியூர் இவி நிறுவனம், ஈக்கோ டிரிப்ட் 350 என்ற எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் 3.5 கிலோவாட் அவர் லித்தியம் அயன் பேட்டரி, 3 கிலோவாட் மோட்டார் இடம் பெற்றுள்ளது. அதிகபட்சமாக 40 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். அதிகபட்சமாக 75 கி.மீ வேகம் வரை செல்லும்.
முழுமையாக சார்ஜ் செய்தால் 171 கி.மீ தூரம் வரை செல்லலாம். ரிவர்ஸ் மோட், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், டவுன்-ஹில் அசிஸ்ட், பார்க்கிங் அசிஸ்ட் உட்பட பல்வேறு வசதிகள் இதில் உள்ளன. ஷோரூம் விலையாக சுமார் ரூ.1,29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.