புரட்டாசி மாத பூஜை: சபரிமலை கோயில் நடை 17ம் தேதி திறப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் புரட்டாசி மாத பூஜைகள் வரும் 18ம் தேதி தொடங்குகின்றன. இதை முன்னிட்டு 17ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை நடத்துவார்.

அன்றைய தினம் வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது. மறுநாள் (18ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெறும். 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை இந்த பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் தினமும் பக்தர்கள் நெய்யபிஷேகம் நடத்தலாம். 22ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் புரட்டாசி மாத பூஜைகள் நிறைவடையும்.

Related posts

தீவிரவாதிகளுக்கு உதவியவர் எம்பியாக பதவியேற்க என்ஐஏ ஒப்புதல்: நீதிமன்றம் இன்று உத்தரவு

டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு: மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

எம்பிக்கள் இருக்கையில் உள்ள மைக் ஆப் செய்யும் சுவிட்ச் என்னிடமில்லை: மக்களவை சபாநாயகர் தகவல்