பஞ்சாப் மாபியாக்களை ஒடுக்க புல்டோசர்களை அனுப்பி வைப்பேன்: உத்தரபிரதேச மாநில முதல்வர் ஆவேசம்

லூதியானா: பஞ்சாப் மாபியாக்களை ஒடுக்க புல்டோசர்களை அனுப்பி வைப்பேன் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். பஞ்சாப் மாநிலம் லூதியானா மற்றும் ஆனந்த்பூர் சாஹிப்பில் நடந்த இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ‘புனித பூமியான பஞ்சாப், தற்போதைய ஆம் ஆத்மி அரசு, முந்தைய காங்கிரஸ் அரசுகளால் அசுத்தமடைந்துள்ளது.

காங்கிரசும், ஆம் ஆத்மியும் பஞ்சாப் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை. இந்த அரசுகளின் அலட்சியத்தால் நிலஅபகரிப்பு, போதைப்பொருள், மணல் மாபியாக்களின் கூடாரமாக பஞ்சாப் மாறியுள்ளது. இந்த மாஃபியாக்களை ஒடுக்க வேண்டும். பாஜக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தால், மாபியாக்களை ஒடுக்குவதற்காக உத்தரபிரதேசத்தில் இருந்து புல்டோசர்களை அனுப்பி வைப்பேன். பஞ்சாபில் பாஜக ஆட்சி அமைந்தால், அடுத்த 48 மணி நேரத்தில் மாஃபியா கும்பல்களை ஒழித்து விடுவோம்’ என்றார்.

Related posts

ராகுல்காந்தியின் நாக்கை வெட்டுபவருக்கு ரூ.11லட்சம் : சிவசேனா எம்எல்ஏ சர்ச்சை கருத்து

6 போலீசார் சஸ்பெண்ட்

நாடாளுமன்றத்தில் வெளி விவகாரம் உள்பட 4 நிலைக்குழுக்களின் தலைவர் பதவி காங்கிரசுக்கு கிடைக்கும்