பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் தண்ணீர் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மோதலில் 4 பேர் சுட்டுக்கொலை..!!

குர்தாஸ்பூர்: பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் தண்ணீர் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மோதலில் 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் இரவு ஜஹானின் கீழ் வரும் ஸ்ரீஹர்கோபிந்த்பூரின் லைட் சௌக்கில் என்ற இடத்தில் தண்ணீர் பிரச்சனையில் இரு குழுக்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அப்போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் நோக்கி 60 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்களில் 2 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

உயிரிழந்தவர்கள் முதல் தரப்பைச் சேர்ந்த ஷம்ஷேர் சிங் மற்றும் வித்வான் கிராமத்தைச் சேர்ந்த பல்ஜீத் சிங் என்றும், இரண்டாம் தரப்பைச் சேர்ந்த நிர்மல் சிங் மட் கிராமத்திலும், பால்ராஜ் சிங் வித்வானிலும் வசிப்பவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், குடும்பத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக மருத்துவர் தகவல் தெரிவிக்கையில், சம்பவத்திற்குப் பிறகு, அங்ரேஸ் சிங் மற்றும் சுரிந்தர் சிங் ஆகியோர் காயமடைந்த நிலையில் தன்னிடம் வந்ததாக கூறினார். அவரது உடல்நிலை கவலைக்கிடமானதால், அமிர்தசரஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் ஷம்ஷேர் சிங் மற்றும் பல்ஜீத் சிங் ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டனர். மறுபுறம் காயமடைந்தவர்கள் மற்றொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போட்டி காரணமாக இந்த சண்டை நடந்ததாக எஸ்ஹோ சத்பால் சிங் தெரிவித்தார் என்றும் கூறினார்.

 

Related posts

கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.!!

காஷ்மீர்: துப்பாக்கிச்சூட்டில் 2 வீரர்கள் காயம்

இன்ஸ்டாவில் “டைவர்ஸ்” அறிவித்த துபாய் இளவரசி!: கணவரின் வேறொரு தொடர்பை சுட்டிக்காட்டி பதிவு!!