பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்றம் உத்தரவு திருமணமாகி லிவ்-இன் உறவில் இருப்போரை பாதுகாப்பது தவறு: தவறு செய்வோரை ஊக்குவிக்கும் என கருத்து

சண்டிகர்: பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்றத்தில் 40 வயதுடைய பெண் மற்றும் 44 வயதுடைய ஆண் ஒருவர் உட்பட லிவ்-இன் உறவுகளுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி சந்தீப் மவுத்கில் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரர்களில் ஆணுக்கு திருமணமாகி குழந்தைகள் இருந்தாலும் விவாகரத்து பெற்ற பெண்ணுடன் சேர்த்து வாழ்கிறார். தனது துணைக்கு திருமணமான விஷயம் தெரிந்திருந்தும் அந்த பெண் லிவ்-இன் உறவில் இருக்க விரும்புகிறார்.

அனைத்து லிவ்-இன் உறவுகளும் திருமண உறவுகள் ஆகாது. அது விவகாரத்து பெறாத ஆணின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு அநீதியாகி விடும். திருமணமும், குடும்பமும் பாதுகாப்பை வழங்கும் முக்கியமான சமூக அமைப்புகளாகும். குழந்தைகளை வளர்ப்பதில் பராமரிப்பதில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன. கணவன், மனைவி இருவருக்கும் தார்மீக, சட்டப்பூர்வ கடமைகளை திருமணம் உருவாக்கிறது.

எனவே, இரு நபர்கள் சில நாட்கள் ஒன்றாக வாழ்வதால், அதன் அடிப்படையில் லிவ் இன் உறவுகளுக்கு உரிமை கோர முடியாது. குறிப்பாக, லிவ் இன் உறவில் இருக்க விரும்பும் திருமணமானவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்கினால், அது தவறு செய்பவர்களை ஊக்குவிக்கும். ஏதோ ஒரு வகையில் இருதார மணத்தையும் ஊக்கப்படுத்துவது போலாகும். அதேச சமயம், வீட்டை விட்டு ஓடிப்போகும் தம்பதிகள் குடும்பத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவது மட்டுமின்றி, தங்கள் பெற்றோர் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் வாழும் உரிமையையும் மீறுகின்றனர்.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் திருமணம் என்பது சமுதாயத்தில் மிகவும் அவசியமானது. திருமணம் என்பது சட்டப்பூர்வ உரிமைகளுடன், சமூக மரியாதையுடன் கூடிய புனிதமான உறவு. அதன் ஆழமான கலாச்சார தோற்றத்துடன், ஒழுக்கம் மற்றும் நெறிமுறை பகுத்தறிவுக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் அளிக்கிறது. இருப்பினும், காலப்போக்கில் மேற்கத்திய கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்ட ஒரு பகுதியினர் லிவ்-இன் உறவுகளை விரும்புகின்றனர். இவ்வாறு நீதிபதி கூறி உள்ளார்.

Related posts

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடத்த நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் இங்கிலாந்தின் மொயின் அலி