புனேயில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் பலி

புனே: டெல்லியை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள ஆக்ஸ்போர்டு கவுன்டி கல்ப் கோர்ஸ் ஹெலிபேட்டில் இருந்து நேற்று காலை மும்பையின் ஜூஹூ நோக்கி புறப்பட்டு சென்றது. பவ்தான் பகுதியில் வந்தபோது ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டர் தரையில் மோதி தீ பிடித்து எரிந்தது. இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 2 விமானிகள், ஒரு பொறியாளர் என 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தகவலறிந்த தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். பின்னர் கருகிய நிலையில் 2 விமானிகள் உட்பட மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர், பனிமூட்டம் காரணமாக விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் இன்று முதல் தொடக்கம்

லெபனானின் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்புடன் நடந்த மோதலில் 8 இஸ்ரேல் வீரர்கள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டியில் நகைக்கடையில் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது