கூழ்தோசை

தேவையானவை

பச்சரிசி – 250 கிராம்
பச்சை மிளகாய் – ஒன்று
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
வெங்காயம் – ஒன்று
கடுகு – அரை டீஸ்பூன்,
சீரகம் – கால் ஸ்பூன்,
எண்ணெய்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி பொடியாக நறுக்கவும். பச்சரிசியை 1 மணி நேரம் ஊறவைத்து, களைந்து, நைஸாக அரைக்கவும். ஒரு கிண்ணம் மாவை எடுத்து உப்பு, தண்ணீர் சேர்த்துக் கரைத்து வாணலியில் விட்டு நன்கு கிளறி கூழ் பதத்துக்கு வந்ததும் இறக்கவும். இதை மீதமுள்ள மாவுடன் சேர்த்துக் கலக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு தாளித்து, சீரகம், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாயை சேர்த்து வதக்கி, கலந்து வைத்த மாவுடன் சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து (மிதமான தீயில் அடுப்பை எரியவிடவும்) மாவை பரவலாக ஊற்றி, லேசாக எண்ணெய் விட்டு, நன்கு வெந்தவுடன் எடுக்கவும். இந்தத் தோசைக்கு உளுந்து தேவை இல்லை. ரவா தோசை போல டேஸ்ட்டாக இருக்கும்.

 

Related posts

விநாயகர் சதுர்த்தி: கொழுக்கட்டை ஸ்பெஷல்

காளான் பாஸ்தா

பிரட் ட்ரை குலாப் ஜாமூன்