புழல் 23வது வார்டு அரசு பள்ளியில் ரூ.40 லட்சம் செலவில் 2 வகுப்பறை கட்டிடம்: கவுன்சிலர் திறந்து வைத்தார்

புழல்: மாதவரம் மண்டலம் 23வது வார்டு புழல் கண்ணப்பசாமி நகரில் சென்னை தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் 2023-2024ம் ஆண்டுக்கான வார்டு மேம்பாட்டு நிதியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

பள்ளி தலைமையாசிரியர் மாலதி தலைமை தாங்கினார். 24வது வார்டு மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். இதில், வார்டு கவுன்சிலர் ராஜன் பர்ணபாஸ் கலந்துகொண்டு, ரூ.40 லட்சம் செலவிகள் புதியதாக கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டிடத்தினை, மாணவர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ – மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு; அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

அருவியில் நண்பர்களுடன் குளித்தபோது திடீர் வெள்ளத்தில் சிக்கி 3 மருத்துவ மாணவர்கள் பலி: 2 மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை

தண்டவாளத்தில் டெட்டனேட்டர்கள் கிடந்ததால் ராணுவ சிறப்பு ரயில் நிறுத்தம்: ரயில்வே ஊழியர் கைது