புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் வழக்கில் டிஎன்ஏ பரிசோதனைக்காக 4 சிறுவர்கள் ஆஜர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் ஏற்கனவே 12 நபர்களிடம் டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரிகளை எடுத்துள்ளனர். இதன் முடிவுகளுகாக சென்னையில் உள்ள பகுபாய்வு மையத்திற்கு ரத்த மாதிரிகளானது அனுப்பபட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே 4 சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்ததாக சிபிசிஐடி போலீசாருக்கு வந்த தகவலை தொடர்ந்து அவர்களுக்கும் டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்று மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் மனுதக்கல் செய்திருந்தனர்.

இதனை தொடர்ந்து 4 சிறுவர்களுக்கும் ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட நீதிமன்றமானது உத்தரவிட்டது. இந்த பரிசோதனையின் போது குழந்தைகள் நல அலுவலர்கள், சிபிசிஐடி போலீசார், குழந்தைகளின் பெற்றோர் ஆகியோர் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் நீதிமன்றம் விதித்தது.

அதன்படி இன்று 4 சிறுவர்களும் தங்களது பெற்றோறுடன் ஆஜராகியுள்ளனர். டிஎன்ஏ பரிசோதனைகாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள மையத்திற்கு தற்போது வந்துள்ளனர். அவர்களுடன் சிபிசிஐடி போலீசார் மற்றும் குழந்தைகள் நல குழு அதிகாரிகளும் உடன் உள்ளனர்.

Related posts

அசாமில் ரூ19 கோடி ஹெராயின் பறிமுதல்

வௌியுறவுத்துறை செயலாளராக விக்ரம் மிஸ்ரி நியமனம்

கோயிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது லாரி மீது டெம்போ மோதல்; 13 பேர் நசுங்கி பலி: கர்நாடகாவில் பயங்கரம்