புதுச்சேரியில் தொடர்மழை காரணமாக இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

புதுச்சேரி: கனமழை காரணமாக நாளை புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் தனியார் பள்ளிகளும் சிறப்பு வகுப்பு மற்றும் எந்த வகுப்புகளும் நடத்த வேண்டாம் என்று பள்ளி கல்வி துறை அறிவுறித்தியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அத்துடன் மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் பலத்த தரைகாற்று வீசலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் ஒருசில பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. புதுச்சேரியில் இரண்டாவது நாளாக இன்றும் இரவு சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக பாவாணன் நகர், புஸ்ஸி வீதி, கருவடிகுப்பம், பாரதி வீதி, மறைமலையடிகள் சாலை, ரெயின்போ நகர், இந்திராகாந்தி சதுக்கம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியது. குறிப்பாக சாரம் மற்றும் பாவாணன் நகர் பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் தொடர் மழை காரணமாக வாகனங்கள் நீரில் ஊர்ந்தபடி சென்றன. தொடர்மழை காரணமாக இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு