புதுச்சேரியில் 21 முதல் காலாண்டு தேர்வு: செப்.30 முதல் அக்.4 வரை விடுமுறை

புதுச்சேரியில் செப்டம்பர் 21ம் தேதி முதல் 29ம் தேதி வரை காலாண்டு தேர்வுகள் நடைபெறும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாகியுள்ள நிலையில், 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஒரே நேரத்தில் காலாண்டு தேர்வு நடைபெறுகிறது.

மேலும், புதுச்சேரியில் செப்டம்பர் 30ம் தேதி முதல் அக்.4ம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்பட்டு, அக்.5ல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக்தில் காலாண்டுத் தேர்வுக்கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்,15 முதல் 27ம் தேதி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பிளஸ் 1 வகுப்புக்கு காலை 9.30 முதல் மதியம் 12.45 மணி வரையும், பிளஸ் 2 வகுப்புக்கு மதியம் 1.15 முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடைபெறும். இதுபோன்று, 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு செப்.19ல் தொடங்கி 27ம் தேதி வரை காலாண்டு தேர்வு நடத்தப்பட உள்ளது. செப்.28 முதல் அக்.2-ம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Related posts

நீட் முறைகேடு – நாடாளுமன்றம் முன் இன்று போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!