மே 5ம் தேதி மருத்துவமனைக்கு வரவேண்டாம் வெளிநோயாளிகளுக்கு புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மே 5ம் தேதி வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது என மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது ஜிப்மர் மருத்துவமனை. இங்கு புதுவை மட்டுமல்லாமல் தமிழகத்தை சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஜிப்மர் நிர்வாகம் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில் மத்திய அரசின் விடுமுறை தினமான 05.05.2023 அன்று புத்த பூர்ணிமாவை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளி பிரிவுகள் இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
அதே நேரம் அவசர மருத்துவ பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என்றும், ஏப்ரல் 6 ஆம் தேதி வெளிப்புற நோயாளிகள் பிரிவுகள் வழக்கம்போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்