புதுச்சேரி ஜிப்மர் மருத்துவனையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த தலா ரூ.1 லட்சம் கேட்கும் ஆடியோ வெளியீடு..!!

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 1,180 பேரை மீண்டும் பணியில் அமர்த்த டெண்டர் எடுத்த புதிய நிர்வாகம் ஒரு நபருக்கு ரூ.1லட்சம் லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை பராமரிக்கும் பொறுப்பு தனியார் இடம், டெண்டர் மூலமாக விடப்பட்டுள்ளது. சென்னையை தலைமை இடமாக கொண்டிருக்கும் நிறுவனம் மீது குறைபாடுகள் எழுந்ததால் மும்பையை தலைமையிடமாக கொண்டிருக்கும் கிரிஸ்டல் ஒருங்கிணைந்த சேவைகள் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது.

இதில் ஏற்கனவே பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்களை தொடர்ந்து பணியாற்ற வழிவகை செய்ய வேண்டும் என்ற வாக்குறுதியுடன் டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பழைய பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க தலா ரூ.1 லட்சம் தர வேண்டும் என டெண்டர் எடுத்த புதிய நிர்வாகம் கேட்கும் ஆடியோ வெளியாகியுள்ளது.

இதையடுத்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு குழு தலைவர் முருகன்; தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார். ஜிப்மர் மருத்துவமனையில் 1,180 பேர் ஒப்பந்த பணியாளர்கள் இருக்கின்றனர். அவர்களில் 500-க்கும் மேற்பட்டோருக்கு டெண்டர் எடுத்த புதிய நிர்வாகம் அடையாள அட்டையை வழங்காமல் காலம் தாழ்ந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

Related posts

சென்னையில் செல்லப்பிராணி வளர்ப்போர் அடுத்த மூன்று மாதத்திற்குள் ஆன்லைன் உரிமம் பெற மாநகராட்சி உத்தரவு

3 கி.மீ. தூரம் பேருந்திற்கு வழிவிடாமல் அடம்பிடித்த ஆட்டோ ஓட்டுநர்: ஹாரன் அடித்ததால் அரிவாளைக் காட்டி மிரட்டல்

மருத்துவ சிகிச்சையில் ஏற்படும் தவறுகளுக்காக மருத்துவர்களை சிறையில் அடைக்கும் தண்டனை பிரிவை நீக்குக: கலாநிதி வீராசாமி