புதுச்சேரி அரசுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

சென்னை: வேண்டியவர்களுக்கு புறவாசல் வழியாக பணி நியமனம் அளித்து, வாக்களித்த மக்களுக்கு ஏன் துரோகம் செய்கிறீர்கள்? ஏமாற்றுகிறீர்கள்? 16 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரி அரசுக்கு, நியாயமான தேர்வை நடத்த முடியாதா என்று புதுச்சேரி அரசுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, 52 துறைகளில் புறவாசல் நியமனங்கள் நடைபெறுவதாக புதுச்சேரி அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. முறையான அறிவிப்பு வெளியிட்டு, விதிகளுக்கு உட்பட்டு தேர்வு நடத்தி, தகுதியின் அடிப்படையில், இடஒதுக்கீட்டை பின்பற்றி பணிநியமனங்கள் வழங்க அறிவுறுத்தியுள்ளது. சட்ட விரோதமாக பணி நியமனங்கள் நடைபெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி அரசுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்