புதுச்சேரியில் நடக்கும் கட்டுமான பணிக்காக வந்த பீகார் கட்டிட தொழிலாளர்கள் 18 பேர் கடத்தல்: 6 ஆட்டோ டிரைவர்கள் கைது

சென்னை: பீகார் மாநிலத்திலிருந்து சென்னைக்கு வந்த கட்டிட தொழிலாளர்கள் 18 பேரை கடத்திய 6 ஆட்டோ டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் ₹18 ஆயிரம் கேட்டு ஆட்டோ டிரைவர்கள் மிரட்டியது அம்பலமாகியுள்ளது. பீகார் மாநிலத்திலிருந்து கட்டிட வேலைக்காக நேற்று முன்தினம் 18 பேர் ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்தனர். அங்கிருந்து எழும்பூர் செல்ல பிரீபெய்டு ஆட்டோவைவை அணுகினர். அப்போது அங்கிருந்த ஆட்டோ டிரைவர் ஜெகதீசன் என்பவர் 18 பேரையும் வால்டாக்ஸ் சாலைக்கு ஆனால், அங்கிருந்த ஆறு ஆட்டோ டிரைவர்கள், பீகார் தொழிலாளர்கள் 18 பேரையும் எழும்பூருக்கு அழைத்துச் செல்லாமல், சோழிங்கநல்லூர் பகுதிக்கு ஆட்டோவில் கடத்தி சென்றனர்.

பின்னர், ஆட்டோ டிரைவர்கள், பீகார் தொழிலாளர்களை சோழிங்கநல்லூரில் சிறைபிடித்து 18 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டினர். அதில் ஒருவர் மட்டும் தப்பிச் சென்று தங்களை அழைத்த புரசைவாக்கத்தில் கட்டிட ஏஜென்ட் உள்ள ராகேஷ் குமாருக்கு (26) என்பவருக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக காவல் கட்டுப்பட்டு அறைக்கு போன் செய்து, கட்டிட வேலைக்கு வந்தவர்களை சென்ட்ரலில் இருந்து ஆட்டோ டிரைவர்கள் கடத்திச் சென்ற தகவலை பெரியமேடு போலீசில் புகார் கூறினார். இதுகுறித்து பீகார் மாநில தொழிலாளர்களின் செல்போனை சோதனை செய்தபோது, அதன் சிக்னல் சோழிங்கநல்லூர் பகுதியில் இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் சோழிங்கநல்லூர் பகுதிக்குச் சென்று, அங்கு இருந்த ஆட்டோ டிரைவர்கள் 6 பேரை கைது செய்தனர்.

மேலும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களையும் மீட்டனர். இந்த சம்பவம் நடந்தது சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலை என்பதால் பூக்கடை காவல் நிலையத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. அதன் பேரில் பூக்கடை போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். சென்ட்ரல் பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் ஆட்டோ டிரைவர்களான வியாசர்பாடி பி கல்யாணபுரத்தை சேர்ந்த குமரேசன் (29), மதன்ராஜ் (30), வியாசர்பாடி கென்னடி நகரைச் சேர்ந்த மணி (33), சவுகார்பேட்டையைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (24), புளியந்தோப்பைச் சேர்ந்த சுரேஷ்குமார் (32), மணலி புது நகரைச் சேர்ந்த ஜெகநாதன் (40) ஆகியோர் இதில் ஈடுபட்டது தெரிய வந்தது. கடத்தல்காரர்களாக மாறிய ஆட்டோ டிரைவர்கள் மீது பல போலீஸ் ஸ்டேஷன்களில் புகார்கள் நிலுவையில் உள்ளது.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!