பொதுப்பணித்துறை அதிகாரி தற்கொலை

ஈரோடு: பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜா காடு முதல் வீதியை சேர்ந்தவர் அங்குராஜ் (53). இவர் கோவை மாவட்டத்தில் பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்தார். அங்குராஜ்க்கு திலகவதி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். அங்குராஜ் மது பழக்கத்துக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. மதுவை வாங்கி வந்து வீட்டில் வைத்து குடிப்பாராம். இதனால் அங்குராஜ் மது குடிக்க தொடங்கினால் அருகில் உள்ள தனது தாய் வீட்டிற்கு திலகவதி மகள்களுடன் சென்றுவிடுவாராம். இந்நிலையில், அங்குராஜ் கடந்த வாரம் கோவை மாவட்டத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் பவானிசாகருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த சூழலில், கடந்தகடந்த 2 நாட்களாக அங்குராஜ் வீட்டின் கதவு திறக்காமல் மதுகுடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் திலகவதி தனது மகள்களுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசிவதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்த்தால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் நேற்று கதவை உடைத்து பார்த்தனர். அப்போது, அங்குராஜ் வீட்டுக்குள் மகளின் துப்பட்டாவால் தூக்குபோட்டு இறந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

துபாய், மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 6 கிலோ தங்கம் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலில் 4 பேர் கைது

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே