பொதுமக்கள் அளிக்கும் இந்த வரவேற்பு, முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் திட்டங்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பு: தமிழச்சி தங்கப்பாண்டியன் கருத்து

சென்னை: பொதுமக்கள் அளிக்கும் இந்த வரவேற்பு, முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் திட்டங்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பு என தமிழச்சி தங்கப்பாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகர்,வடபழனி பகுதிகளில் தென்சென்னை நாடாளுமன்றத்தின் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் இன்று காலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருடன் மாவட்ட செயலாளர் மயிலை த.வேலு, சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி வட்ட கழக செயலாளர்கள் கழக நிர்வாகிகள், பொதுமக்கள், கழக தொண்டர்கள் , தோழமைக் கட்சி நிர்வாகிகள் என வழிநெடுக மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதை தொடர்ந்து நிருபர்களை சந்தித்த திமுக கழக தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் கூறுகையில், பொதுமக்கள், கழக நிர்வாகிகள் என பலர் ஆரவாரத்துடன் பிரம்மாண்ட வரவேற்பளித்து வருகிறார்கள். இந்த வரவேற்புகள் அத்தனையும் நம் முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் திட்டங்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பு. அதுமட்டுமின்றி பொதுமக்கள் எப்போது வாக்களிக்கும் தேதி வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். கட்டாயமாக உதயசூரியனுக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் எங்களை வெற்றி பெறச் செய்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

ராஜஸ்தான் அமைச்சரை கண்டித்து ரத்த மாதிரியுடன் எம்பி போராட்டம்

அமர்நாத் யாத்திரை தொடங்கியது