பூதூர் ஊராட்சியில் அரசு பள்ளியில் சேர விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுராந்தகம் : மதுராந்தகம் ஒன்றியம் பூதூர் ஊராட்சியில்அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்டது பூதூர் ஊராட்சி. இங்கே உள்ள அரசு ஆரம்பப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் மாணவ மாணவியர் சேர்ந்து கல்வி பயின்று பயன்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பாக விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நேற்றுமுன்தினம் ஊராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஏ.சி. சுரேஷ் தலைமை தாங்கினார். ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் கிளாரின் முன்னிலை வகித்தார்.

முன்னதாக இல்லம் தேடி கல்வி ஆசிரியர் திருமுருகன் அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கலை குழுவினர் திரைப்பட கலைஞர்கள்போல்பேசி தமிழக அரசின் சார்பாக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகள் குறித்து எடுத்துரைத்தனர். குறிப்பாக தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு காரணமாக மருத்துவர் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளைப்படிக்க நமது கிராமப்புற மாணவர்களுக்கும் வாய்ப்புகள் உள்ளது. அது மட்டுமின்றி பல்வேறு தமிழக அரசு நலத்திட்ட உதவிகளும் மாணவ மாணவியர்களுக்கு கிடைக்கிறது என கூறினர். இந்த நிகழ்ச்சியின்போது அப்பகுதி மாணவ மாணவியர், சிறுவர் சிறுமியர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

அக்-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!.

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்