பொதுசொத்துக்களை சேதப்படுத்திய வழக்கிலிருந்து பாஜ எம்பி விடுதலை

கோரக்பூர்: பாஜவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ராதாமோகன் தாஸ் பொதுசொத்துக்களை சேதப்படுத்தியதாக தொடரப் பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் காலையில் நடைப்பயிற்சி சென்ற ராதாமோகன் தாஸ் அகர்வால், கோரக்பூர் பல்கலைக் கழகத்திற்குள் நடைப் பயிற்சி செல்ல முயன்றுள்ளார். அதற்கு பல்கலைக் கழக காவலர் அனுமதி மறுக்கவே, ராதாமோகன் தாஸ் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பொது சொத்துக்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் ராதாமோகன் தாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த வழக்கில் ராதாமோகன் தாஸ் குற்றமற்றவர் என அறிவித்த கோரக்பூர் நீதிமன்றம் வழக்கிலிருந்து அவரை விடுவித்து உத்தரவிட்டது.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை