தமிழகத்தில் கோயில்களில் வைக்கப்பட்டுள்ள சாய்பாபா சிலைகளை அகற்ற ஐகோர்ட்டில் பொது நல வழக்கு: அறநிலையத்துறை பதில் தர உத்தரவு

சென்னை: இந்து கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள சாய் பாபா சிலைகளை அகற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவையை சேர்ந்த சுரேஷ்பாபு என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், இஸ்லாமியராக பிறந்து, இஸ்லாத்தையும், இந்து மதத்தையும் போதித்த சாய் பாபாவுக்கு ஷீரடியில் கோயில் அமைந்துள்ளது. தமிழகத்திலும் பல சாய்பாபா கோயில்கள் அமைந்துள்ளன. இந்த நிலையில், ஆகம விதிகளுக்கு முரணாக தமிழகத்தில் பல இந்து கோயில்களில் சாய்பாபாவின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே, அந்த சிலைகளை அகற்ற அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும். இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் எதிர்காலத்தில் சாய் பாபா சிலைகள் அமைக்கப்படாது என்பதை உறுதி செய்யுமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related posts

சந்திரபாபு நாயுடு நிலத்தை அளந்து கொடுக்க லஞ்சம் பெற்ற சர்வேயர் சஸ்பெண்ட்

கோவையை சேர்ந்த நகை வியாபாரியிடம் ஓடும் ரயிலில் 600 கிராம், ரூ.8.46 லட்சம் கொள்ளையடித்த 6 பேர் கும்பல் கைது

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் பற்றி ஜனாதிபதி உரையில் எதுவும் இல்லாதது வேதனை தருகிறது: மணிப்பூர் எம்.பி. ஆதங்கம்