பொதுக்கூட்டத்தில் அர்ஜுன் சம்பத் அவதூறாக பேசியதாகப் புகார்: நூற்றுக்கணக்கான விசிக தொண்டர்கள் நாகூரில் திரண்டதால் பதற்றம்

நாகை: நாகை அருகே பொதுக்கூட்டத்தில் விசிக, திருமாவளவன் குறித்து அவதூறாக பேசியதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்க்கு எதிராக முழக்கங்கள் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை மாவட்டம் நாகூரில் ஏற்பட்ட பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் விசிக தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த நூற்றுக்கணக்கான விசிகவினர் பொதுக்கூட்டம் நடைபெற்ற பகுதியை நோக்கி திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது இந்து அமைப்பை சேர்ந்தவர்களும் திரண்டதால் இரு தரப்பினரும் மாறி மாறி முழக்கங்களை எழுப்பினர். இதை அடுத்து அங்கு அதிவிரைவு படை போலீசார் குவிக்கப்பட்டனர்.

பொதுக்கூட்டம் நடைபெற்ற சிவன் தெற்கு வீதி, பெருமாள் கீழ வீதி பிடரி கோவில் தெரு வழியாக எஸ்.பி தலைமையில் அணிவகுத்து சென்ற போலீசார் இரு தரப்பினரையும் வெளியேற்றினர். பின்னர் விசிகவினர் நாகை எஸ்.பி அர்ஷ்ஷிங்கை சந்தித்து அர்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர்.

Related posts

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி

அக்-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!