பொதுமக்கள் சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்

சென்னை: மும்பை காவல் அதிகாரி எனக்கூறி ஆள்மாறாட்ட மோசடி:
அப்பாவி பொதுமக்களை குறிவைத்து மிரட்டி பணம் பறிக்கும் இணையதள மோசடியாளர்கள் இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட நபருக்கு FedEX வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவதாக சொல்லி பாதிக்கப்பட்ட நபரின் பெயரில் பார்சலில் வந்துள்ளதாகவும் அந்த பார்சலில் தடைசெய்யப்பட்ட பொருள்கள் இருப்பதால் அந்த அழைப்பை மும்பை அந்தேரி காவல் துறைக்கு மாற்றுவதாக கூறியுள்ளார். மும்பை காவல்துறை அதிகாரி என்று சொல்லி பேசிய நபர் அந்த பார்சலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதால் பாதிக்கப்பட்ட நபரிடம் அவர் குற்றமற்றவர் என்பதை நிருபிக்க அவரின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அனுப்பி வைக்கவேண்டும் என்றும் தவறினால் நீங்கள் சட்ட சிக்கலை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதால் அவர் ரூ.1,18,00,000/- பணத்தை பல்வேறு வங்கிகளுக்கு அனுப்பியுள்ளார். பின்னர் அவர் ஏமாற்றப்பட்டதை தெரிந்துகொண்டார்.

இது தொடர்பாக SCCIC குற்ற எண். 36/2024, U/s 318(4), 319(2), 336(3), 340(2) BNS & 66D of IT (Amendment) Act 2008,ல் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும் தனிப்படை அமைத்து மோசடி செய்த வங்கி கணக்கின் உரிமையாளர் ரமேஷ்பாய் படாபி போக்ரா மற்றும் முகவர்கள்- பரேஷ் நர்ஷிபாஹாய் மற்றும் விவேக் ஆகியோரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

CBI அதிகாரி போன்று ஆள்மாறாட்ட மோசடி (TRAI Scam ) :-
பாதிக்கப்பட்டவருக்கு தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திலிருந்து பேசுவதாக கூறி அழைத்து தாங்கள் சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாகவும் இது தொடர்பாக சிபிஐ அதிகாரியை தொடர்பு கொள்ளுமாறு கூறி ஒரு எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளார். சிபிஐ அதிகாரியாக பேசிய நபர் பாதிக்கப்பட்ட நபரிடம் அவர் குற்றமற்றவர் என்பதை நிருபிக்க நாங்கள் சொல்லும் வங்கி கணக்குகளுக்குப் பணத்தை அனுப்பி வைக்கவேண்டும். தவறினால் நீங்கள் சட்ட சிக்கலை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதால் பாதிக்கப்பட்டவர் அவர்கள் கொடுத்த வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பியுள்ளார்.

இதே போன்று மேலும் ஒரு புகாரும் கணினிசார் குற்றப் பிரிவு தலைமையிடத்தில் பெறப்பட்டது. இது தொடர்பாக SCCIC குற்ற எண். 41/2024 & 49/2024, U/s 318(4), 319(2), 336(3), 340(2) BNS & 66D of IT (Amendment) Act 2008 ன் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு துரித நடவடிக்கை எடுத்து முறையே ரூ. 52,45,000/- மற்றும் ரூ. 1,70,57,000/- மீட்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகிறது:-
* பொதுமக்கள் இது போன்ற அழைப்புகளை கண்டு அஞ்சாமல் கணினிசார் குற்றப் பிரிவு அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

* இது போன்ற அழைப்புகளை துண்டித்து விட்டு குறிப்பிடப்பட்ட அலுவலகத்தை தொடர்பு கொண்டு அழைப்பவரின் அடையாளத்தை உறுதி செய்யவும் .

* தனிப்பட்ட தகவல்கள் மற்றும் நிதி சார்ந்த தகவல்களை அறிமுகமில்லாத நபர்களிடம் தொலைபேசியில் அளிக்காதீர்கள்.

* மோசடி செய்பவர்கள் நமக்கு யோசிக்க நேரமளிக்காமல் அவசரமான சூழலில் இருப்பதாக நம்ப செய்வர். நம்பகமான நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து செயல்படவும்.

* சைபர் மோசடிகள் மற்றும் அவர்களின் ஏமாற்றுத்தந்திரங்களை தொடர்ந்து அறிந்து வைத்திருங்கள். குற்றம் நடைபெறாமல் தடுக்க விழிப்புடன் இருப்பது முக்கியம்.

* உங்கள் வங்கி மற்றும் கடனட்டை கணக்குகளில் அனுமதிக்கப்படாத பரிவர்த்தனைகள் ஏதும் உள்ளதா என தவறாமல் சரிபார்க்கவும்.

* முக்கியமான கணக்குகளில் இரு காரணி பாதுகாப்பைப் பயன்படுத்தவும்.

* மேலும், பொதுமக்கள் தங்களது வங்கிக்கணக்குகளை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் இது போன்ற கணக்குகள் நிதி மோசடிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நீங்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930 ஐ டயல் செய்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும்.

Related posts

அரசின் திட்டங்களை கண்காணிக்கவும் செயல்படுத்தவும் மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

ஃபோர்டு நிறுவனத்தின் மனுவை பரிசீலனை செய்து அனுமதி வழங்கியது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்

எழும்பூர் கண்ணப்பர் திடல் அருகே 1 14 குடும்பங்களுக்கு வீடுகளை ஒதுக்கி ஆணை வழங்கிய உதயநிதிக்கு காங். பாராட்டு