கட்சிகளின் நிதிநிலை அறிக்கையை ஆன்லைனில் தாக்கல் செய்ய ஏற்பாடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: அரசியல் கட்சிகள் தங்களது நிதிநிலை அறிக்கையை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் நிதி பெறுவது, அவர்களுடைய செலவு கணக்கு விவரங்கள் குறித்த அறிக்கைகள் வெளியிடுவது ஆகிய விஷயங்களில் வெளிப்படைத்தன்மை பின்பற்றுவது ஆகிய விஷயங்களில் தேர்தல் ஆணையம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில்,‘‘ அரசியல் கட்சிகள் பெறும் தேர்தல் நிதி,வருடாந்திர கணக்கு விவரங்கள்,நிதி நிலை அறிக்கை ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை கொண்டுவருவதற்காக ஆன்லைனில் தாக்கல் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.

அதில், நிதிநிலை அறிக்கை, தேர்தல் நிதி, தணிக்கை செய்யப்பட்ட கணக்கு விவரங்கள் போன்றவற்றை தாக்கல் செய்யயலாம். நிதி நிலை அறிக்கைகளை தாக்கல் செய்ய இயலாத கட்சிகள் அதற்கான காரணங்களை விளக்க வேண்டும். கட்சிகள் தாக்கல் செய்த விவரங்களை தேர்தல் ஆணையம் பரிசீலித்து அவற்றை ஆன்லைனில் வெளியிடும். இணைய தளத்தில் தேர்தல் செலவு கணக்கையும் தாக்கல் செய்யலாம். இவற்றை தாக்கல் செய்வது குறித்த வழிமுறைகள் அரசியல் கட்சிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது’’ என தெரிவித்தன.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு