கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஆக.30க்கு ஒத்திவைப்பு..!!


நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் உள்ளிட்ட சிபிசிஐடி போலீசாரும், அரசு வழக்கறிஞர் சாஜகான் ஆகியோர் ஆஜராகினர். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பில் சயான், ஜித்தன் ஜாய் ஆகியோர் ஆஜராகினர். 2 பேரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அளித்துள்ளதால் அரசு தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கோரினார். அரசு தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கோரிய நிலையில் வழக்கு விசாரணையை ஆக.30-க்கு ஒத்திவைத்து உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகளை பற்றி அவதூறாக பேசிய மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு கைது

சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்: கோயில்களில் திரளான பக்தர்கள் சிறப்பு வழிபாடு

பிஎன்ஒய் மெலன் வங்கி அலுவலர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: வங்கி சேவைகள் மேம்படுத்துவது குறித்து ஆலோசனை