மோடி அரசை கண்டித்து செப்.1 முதல் செப்.7 வரை தமிழகம் முழுவதும் மறியல்: மார்க்சிஸ்ட் கட்சி அறிவிப்பு

சிவகங்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிவகங்கையில் நேற்று அளித்த பேட்டி: பிரதமர் மோடி ஆட்சியில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். விலைவாசி உயர்வு, வேலையில்லா பிரச்னையை கண்டித்து மார்க்சிஸ்ட் சார்பில் செப்.1 முதல் செப்.7 வரை தமிழகம் முழுவதும் பிரசாரம், மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஊழலைப் பற்றி பேசும் அண்ணாமலை, மோடி ஆட்சியில் வெளிவந்துள்ள ரூ.7.50 லட்சம் கோடி ஊழல் குறித்தும் பேச வேண்டும். ஆனால் இது குறித்து மோடியோ, அண்ணாமலையோ வாய் திறக்கவில்லை.

மோடி ஆட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள காவிரி ஆணையம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இரண்டு அரசுகளை மோத விட்டுக் குளிர் காயலாம் என்று நினைக்கின்றனர். இது தவறான சிந்தனை. காவிரி ஆணையம் போடுகிற உத்தரவை அவர்களே செயல்படுத்த முடியும். அணையை திறந்து தண்ணீர் விடுவதற்கு அதிகாரம் உள்ளது. தமிழகத்தில் எதிர்க்கட்சியாக செயல்படுகிற எடப்பாடி பழனிசாமி, ஒன்றிய அரசின் செயலை கண்டிக்கவோ, காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்பதை ஆணையம் செயல்படுத்த வேண்டும் என்பதையோ வலியுறுத்த மறுக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

குழந்தை இல்லாத விரக்தியில் ஒட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

மருத்துவர்கள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர்

சிலாவட்டம் ஊராட்சியில் புதிய குளம் வெட்டும் பணி மும்மரம்