சொத்து பதிவு கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: கிரெடாய் கோரிக்கை

சென்னை: தமிழக அரசு சொத்து பதிவு கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கிரெடாய் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சொத்து பதிவு கட்டணத்தை உயர்த்தியது தொடர்பாக கிரெடாய் சார்பில் சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதில், சென்னை மண்டல தலைவர் சிவகுருநாதன், தென் மண்டல துணை தலைவர் ஸ்ரீதரன், சென்னை தெற்கு கட்டுமான சங்கத் தலைவர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: சொத்து பதிவு கட்டண உயர்வு நடுத்தர மக்களை பாதிக்கும். சதவீதத்தில் உயர்த்தாமல் ரூபாய் அளவில் உயர்த்தி இருந்தால் நன்றாக இருக்கும். 75 லட்சத்திற்கு குறைவாக விலை உள்ள வீடுகளை மக்கள் அதிக அளவில் வாங்க விருப்பம் தெரிவிக்கின்றனர். எனவே சதவீதத்தில் உயர்த்தும்போது ஒரு குறிப்பிட்ட லட்சம் அதிகரிக்கும். இதனால் மக்கள் சில நேரங்களில் வீடு வாங்காமல் கூட போகலாம். இந்த கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அவர் நல்ல முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related posts

திருப்பதியில் ரூ.13.45கோடியில் சமையற்கூடம் திறப்பு

ரூ.1.58 கோடி கட்டண பாக்கியை கேட்டு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர், மராட்டிய முதல்வருக்கு சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனம் நோட்டீஸ்!!

கீழடி 10ம் கட்ட அகழாய்வில் சுடுமண் தொட்டி கண்டெடுப்பு