சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி நீதிமன்றத்தால் விடுவிப்பு

வேலூர்: தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவருடைய கடந்த காலத்தில் வனத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக விழுப்புரம் மாவட்ட லஞ்சஒழிப்புதுறையினர் 2006-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வில் கடந்த ஆண்டு நவம்பர் வரை நடைபெற்றுவந்தது. அதன் பிறகு உச்சநீதிமன்ற உத்தரவின் படி கடந்த நவம்பர் 7-ம் தேதி முதல் வழக்கு விசாரணை வேலூர் மாவட்ட முதன்மை அமர்வுக்கு மாற்றபட்டது.

இதனை அடுத்து வழக்கு மாற்றபட்ட தினத்தில், அமைச்சர் பொன்முசி மற்றும் அவரது மனைவி வேலூர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அதனை அடுத்து அவர்கள் இருவரும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கொடுக்கபட்டது. தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கபட்டுள்ளது.

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது போடபட்ட வழக்கில் உரிய முகாந்திரம் இல்லாததால் இந்த வழக்கில் இருந்து இருவரையும் விடுத்து வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வசந்தலீலா உத்தரவிட்டுள்ளார்.

Related posts

மணிப்பூரில் தொடரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது: பிரதமர் மோடி உரை

விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

ஆட்குறைப்பில் இறங்கிய பிரபல ‘அனகாடமி’ கல்வி தொழில்நுட்ப நிறுவனம்: 250 ஊழியர்களை திடீரென பணி நீக்கம்