தெய்வமும் குழந்தையும் ஒன்று என்பதால் சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்பு நீதிமன்றத்துக்கும் அரசுக்கும் உள்ளது: உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: கரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களின் சொத்துகள், நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக் கோரி வழக்கில், தெய்வமும் குழந்தையும் ஒன்று என்பதால் சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்பு நீதிமன்றத்துக்கும் அரசுக்கும் உள்ளது என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. கோயில் சொத்துகளை மீட்பதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த கரூர் ஆட்சியருக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சொத்துகளை மீட்க கூட்டுக் குழு அமைத்து 8 ஆண்டுகள் ஆகியும் மீட்கப்படாதது வேதனை அளிக்கிறது என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். திருத்தொண்டர் சபையின் ராதாகிருஷ்ணன் தொடர்ந்த பொதுநல வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related posts

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: கரூரில் முன்னாள் அமைச்சர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்

குமரி: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்