காஞ்சிபுரம் ஜமாபந்தி நிறைவு நாளில் 133 மனுக்களுக்கு உடனடி தீர்வு: எழிலரசன் எல்எல்ஏ பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாளில், எழிலரசன் எல்எல்ஏ முன்னிலையில் 133 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவின்பேரில், வருவாய் தீர்வாக கணக்கு முடிப்பு என்னும் ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 14ம்தேதி தொடங்கி 27ம்தேதி வரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் எம்எல்ஏ ஏழிலரசன் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் திருப்புகுழி, காரை, கீழம்பி, பாலுசெட்டிசத்திரம், திம்மசமுத்திரம் உள் வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று 1000க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்தனர்.

இதில், 133 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு ஏற்படுத்தி, ஒரு மூதாட்டிக்கு பட்டாவை ஏழிலரசன் எம்எல்ஏ வழங்கினார். இந்நிகழ்ச்சியில், வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், வட்டாட்சியர் புவனேஸ்வரன், திமுக ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், படுநெல்லிபாபு , மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், மண்டல தலைவர் செவிலிமேடு மோகன், மாநகர பகுதி செயலாளர்கள் சந்துரு, தசரதன், திலகர், வெங்கடேசன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க தலைவர் நவீன், அனைத்துத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

பெண் ஆசிரியைகளை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக பயிற்சியாளரை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

தண்டரை ஊராட்சியில் ரூ.8 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை: செய்யூர் எம்எல்ஏ திறந்து வைத்தார்