பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு 17ம் தேதி முதல் திருப்பதிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்

சென்னை: திருப்பதி திருமலையில் வரும் 2023ம் ஆண்டு பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக செப். 17ம் தேதி முதல் 30ம் தேதிவரை திருப்பதிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி, திருமலையில் 2 முறை பிரமோற்சவ திருவிழா நடைபெற உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வாயிலாக சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு முதலில் வரும் திருவிழாவிற்காக வரும் 17ம் தேதி முதல் 30ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்தி பயணம் மேற்கொள்ள www.tnstc.in, டிஎன்எஸ்டிசி செயலி மூலம் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்லுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.48 உயர்ந்து ரூ.1,903-க்கு விற்பனை

அக்.01: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!