கொடுத்த வாக்குறுதியை காங். நிறைவேற்றவில்லை: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். இமாச்சலப்பிரதேசம், சிம்லா மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளரை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று பிரசாரம் மேற்கொண்டார். சிர்மார் மாவட்டத்தில் உள்ள நஹான் முதல் கார்னர் வரை நடந்த பேரணியில் பிரதமர் மோடி பேசுகையில், ‘‘நஹான் அல்லது சிர்மார் எனக்கு புதிது அல்ல. ஆனால் இந்த சூழல் புதிதானது.

நான் இங்கு பாஜ மூன்றாவது முறை ஆட்சி அமைப்பதற்காக உங்களின் ஆசிர்வாதத்தை பெறுவதற்காக வந்துள்ளேன். நாட்டின் வளர்ச்சிக்காக பாஜ ஆட்சி அமைக்க வேண்டும். எல்லையோரத்தில் வசிக்கும் இமலாச்சலப்பிரதேச மக்களுக்கு வலுவானநாட்டின் மதிப்பு தெரியும். இமாச்சலில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஆனால் மாநில அரசின் பணியாளர் தேர்வாணையத்தை மூடிவிட்டது” என்றார்.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?