வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை பாஜவின் பொய்கள் வலிமையானவை: காங்கிரஸ் விமர்சனம்

புதுடெல்லி: பாஜவின் 9 ஆண்டுகால ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, அதிகரிக்கும் பணவீக்கம் உள்ளிட்டவை குறித்து காங்கிரஸ் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 9 ஆண்டுகளில் பாஜ அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தன் ட்விட்டர் பதிவில், “2022ன் தொடக்கத்தில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும். இந்தியர் அனைவருக்கும் ஒரு சொந்த வீடு. 24 மணிநேரமும் தடையற்ற மின்சாரம். பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர்களாக உயரும் என்று வாக்குறுதி தந்தீர்கள்.

மோடி அவர்களே இது 2023ம் ஆண்டின் கடைசிநாள். இதிலே எதுவும் இதுவரை நடக்கவில்லை. பாஜவினர் நன்றாக பொய் சொல்வார்கள். அதன் பொய்கள் பலம் வாய்ந்தவை என்று ஒவ்வொரு இந்தியனுக்கும் நன்றாக தெரியும்” என்று இவ்வாறு விமர்சித்துள்ளார்.

இதனிடையே காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் ட்விட்டர் பதிவில், “கடந்த 2021ம் ஆண்டுக்கான பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுக்காமல் தாமதப்படுத்தியது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இதற்கு கொரோனா தொற்று மட்டும் காரணமல்ல, வேறேதோ முக்கிய காரணம் இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்