மதுவிலக்கு மாநாட்டில் அரசியல் கலக்க கூடாது: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

திருச்சி: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையம் வரை வட்ட பேருந்து சேவையை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று துவக்கி வைத்தார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு அரசு போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. சென்னை, மதுரை, கோவைக்கு அடுத்தபடியாக திருச்சி பெரிய நகரமாக இருக்கிறது. எனவே திருச்சியை தலைமையிடமாக கொண்டு தனி போக்குவரத்து கோட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குவது குறித்து விசிகவை சேர்ந்த ஆதவ் அர்ஜீன் பேசிய கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து, முதிர்ச்சியற்ற கருத்து என கட்சியின் மாநில நிர்வாகிகளே தெரிவித்து விட்டனர். எனவே இதுகுறித்து விரிவாக பேச விரும்பவில்லை. விசிக சார்பில் நடைபெறும் மதுவிலக்கு மாநாடு நல்ல நோக்கத்துக்காக நடத்தப்படக்கூடிய மாநாடு. மக்கள் விழிப்புணர்வுக்காக நடத்தப்படுகிறது. இதில் அரசியல் கலக்க கூடாது என விசிக தலைவரும், மது விலக்கு துறை அமைச்சரும் தெரிவித்து விட்டனர். இவ்வாறு கூறினார்.

Related posts

200 மாற்றுத்திறனாளிகளுக்கு தங்கும் விடுதி வசதியுடன் கூடிய சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த ரூ.12.90 லட்சம் ஒதுக்கீடு

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவை போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்படும்: முதல்வர் அறிவிப்பு

உளுந்தூர்பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு