பேராசிரியர் பணி நேர்காணலில் மணக்கோலத்தில் பங்கேற்ற பெண்

மார்த்தாண்டம்: குமரி மாவட்டம் குழித்துறையில் தமிழக அறநிலையத்துறையின் கீழ் ஸ்ரீ தேவி குமாரி மகளிர் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் காலியாக உள்ள கணிதம், தாவரவியல், மலையாளம், விலங்கியல் உட்பட பல்வேறு பிரிவு பேராசிரியர் பணியிடத்திற்கு நேற்று நேர்காணல் நடந்தது. இதில் 90க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மருதம்கோடை சேர்ந்த கோபாலன், சரஸ்வதி தம்பதியின் மகள் விக்னேஸ்வரிக்கும் ஆற்றூர் பாலையன், செல்வி தம்பதியின் மகன் சுஜீனுக்கும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் வைத்து நேற்று திருமணம் நடந்தது. மணமகள் விக்னேஸ்வரி கணித துறையில் பி.எச்.டி பட்டம் பெற்றுள்ளார். அவர் தேவி குமாரி மகளிர் கல்லூரியில் பேராசிரியர் பணிக்கு ஏற்கனவே ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார். திருமண நாளும், நேர்முக தேர்வும் ஒரே நாளில் வந்தது. இதனால் திருமணம் முடிந்த கையோடு மணமகன் சுஜினுடன் மணக்கோலத்திலேயே குழித்துறை ஸ்ரீதேவி குமாரி மகளிர் கல்லூரியில் கணக்குப் பிரிவு பேராசிரியர் பணிக்கு நடந்த நேர்காணலில் பங்கேற்றார்.

Related posts

கேரள மாநிலம் மலப்புரத்தில் குரங்கம்மை அறிகுறியுடன் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!!

பிரதமர் மோடியின் 74ஆவது பிறந்த நாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!!