உற்பத்திப் பொருட்கள் புவிசார் குறியீட்டு அங்கீகாரம்

ஒவ்வொரு நாட்டிலும் புவிசார் குறியீடு பாதுகாப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின் பிரகாரம் ஒவ்வொரு ஊருக்கும் அந்த ஊரில் சிறப்பான பிரபல்யமான விஷயத்திற்காகப் புவிசார் குறியீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும்.உணவுப்பொருட்கள், வேளாண் பொருட்கள், கைவினை மற்றும் கைத்தறி பொருட்கள், இயற்கைப் பொருட்கள் என ஐந்து வகையான உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீட்டு அங்கீகாரம் பெறுவதற்குத் தகுதியானவை. அதன்படி, பூமியில் ஒரு இடத்தில் விளையக்கூடிய பயிர், செய்யக்கூடிய மற்றும் உருவாக்கக்கூடிய பொருட்களின் தரம், அந்த இடத்தினுடைய காலநிலை, நிலம், நீர் போன்றவற்றின் தன்மை ஆகியவற்றை அடிப்படையாக வைத்தே புவிசார் குறியீடு நிர்ணயம் செய்யப்படுகின்றது.

அதுமட்டுமில்லாமல் ஒரு பொருளுக்கான சொந்த இடத்தின் தொன்றுதொட்ட பாரம்பரியத்தை உலகுக்கு தெரிவிப்பதற்கும், எதிர்காலத்தில் அடுத்துவரும் தலைமுறை சந்ததியினருக்கு பாதுகாப்பாக வழங்குவதற்காகப் புவிசார் குறியீடு பாதுகாப்புச் சட்டம் என்பதை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.1999ம் ஆண்டு மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின்கீழ் புவிசார் குறியீடு (பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம், 1999) உருவாக்கப்பட்டு, 2002ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. வட்டாரப் பகுதிகளில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு, அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவதே இந்த புவிசார் குறியீட்டுச் சட்டத்தின் நோக்கம் ஆகும். உதாரணமாக, கோவில்பட்டி கடலைமிட்டாய், திண்டுக்கல் பூட்டு போன்றவற்றை சொல்லலாம்.

வணிக சின்னம் (டிரேட் மார்க்), காப்புரிமை (பேடெண்ட்) மற்றும் புவிசார் குறியீடு (Geographical indication) ஆகிய மூன்று விஷயங்களும் அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தின்கீழ் வருகின்றன.இதில் புவிசார் குறியீட்டைத் தவிர மற்ற இரண்டுமே தனி நபர்களுக்கான உரிமையை நிர்ணயிப்பதாக விளங்குகின்றன. புவிசார் குறியீடு மட்டுமே குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் பொதுவான உரிமையாக விளங்குகிறது.தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் பட்டுச்சேலை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருப்பதி லட்டு, மதுரை மல்லிகைப் பூ, மதுரை சுங்குடி சேலை, மஞ்சள் மாவட்டம் என்று அழைக்கப்படும். சேலம் மாம்பழம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி மரச்சிற்பம் தஞ்சாவூர் ஓவியப் பாணி, தஞ்சாவூர் பாணி ஓவியங்கள், பத்தமடை பாய் ஆகியவை மற்றும் பல பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.

 

Related posts

சென்னை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது: கணக்கெடுப்பில் தகவல்

இலங்கை அதிபர் தேர்தல்; அனுர குமார திசநாயக்க பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை!

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு