கராத்தே போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

கூடுவாஞ்சேரி: மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற 48 மாணவர்களுக்கு கூடுவாஞ்சேரியில் பாராட்டு விழா நடந்தது. இதில், மாவட்ட அளவிலான கராத்தே போட்டி கடந்த மாதம் 29ம் தேதி சிங்கப்பெருமாள் கோவிலில் நடந்தது. மேலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதில், கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு ஊராட்சியில் உள்ள கராத்தே அகாடமி பள்ளியின் சார்பில் 48 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அதில் 15 பேர் முதலிடமும், 13 பேர் இரண்டாம் இடமும், 20 பேர் மூன்றாம் இடமும் பிடித்து தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களையும், கோப்பைகளையும் கைப்பற்றினர்.

இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட விஷ்ணு பிரியா நகரில் நேற்றுமுன்தினம் மாலை நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக கூடுவாஞ்சேரி போலீஸ் எஸ்ஐ திருநாவுக்கரசு கலந்துகொண்டு மாணவ, மாணவிகளை பாராட்டி நினைவு பரிசு, பதக்கம், கேடயம் மற்றும் பாராட்டு சான்று ஆகியவற்றை வழங்கினார்.

Related posts

திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை அக்டோபர் 2ஆம் தேதி போக்குவரத்து மாற்றம்

2 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் ஜம்மு – காஷ்மீரில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு: 40 பதவிக்கு 415 வேட்பாளர்கள் போட்டி

3 மருத்துவர்கள், 3 செவிலியர்கள் மீது தாக்குதல்; டாக்டர்கள் மீண்டும் தீப்பந்தம் ஏந்தி பேரணி: கொல்கத்தாவில் பதற்றம்