ராகுல் காந்தி வெறுப்பு பேச்சுகளை பேசும் பாஜக தலைவர்களை பற்றி தான் விமர்சித்தார்.. இந்துக்களை அல்ல : தெளிவுபடுத்திய பிரியங்கா காந்தி!!

டெல்லி : ராகுல் காந்தி இந்துக்களுக்கு எதிராக பேசவில்லை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெளிவுபடுத்தி உள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி மக்களவையில் நேற்று உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி, பாஜக, ஆர்எஸ்எஸ் இந்துக்களின் பிரதிநிதி இல்லை என்றும் இந்து தர்மத்தை பாஜக பின்பற்றவில்லை என்றும் கூறியிருந்தார். அவரின் பேச்சு ஒட்டுமொத்த இந்துக்களுக்கு எதிராக பேசியது போன்று பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தெளிவுப்படுத்தி உள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தமது சகோதரர் இந்துக்களுக்கு எதிராக பேசவில்லை என்றும் அவர் வெறுப்பு பேச்சுகளை பேசும் பாஜக தலைவர்களை பற்றி தான் பேசினார் என்றும் கூறியுள்ளார்.

மேலும் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் என்ன பேசினார் என்பது மக்களுக்கு தெரியும் என்றும் பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “பணவீக்கத்தை எண்ணி பெண்களும், கருப்புச் சட்டங்களை எண்ணி விவசாயிகளும், அக்னிவீரர் திட்டத்தை எண்ணி இளைஞர்களும், வினாத்தாள் கசிவை எண்ணி மாணவர்களும், தங்கள் மீதான வெறுப்பு மற்றும் வன்முறையை எண்ணி சிறுபான்மை மக்களும் அச்சத்தில் உள்ளனர்.பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அச்ச உணர்வை எங்கும், எதிலும் பரப்புகிறது. மக்கள் மத்தியில் அச்சம், வன்முறை மற்றும் வெறுப்பினை பரப்பும் யாரும் பலன் அடைய முடியாது. பாஜக இந்த பாணி அரசியலை உடனே நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Related posts

டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

ரிஷி சுனக் மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா?.. இன்று நடைபெறும் இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் 107 இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் போட்டி..!!

பீகாரில் உள்ள அனைத்து பாலங்களின் உறுதி தன்மையை ஆராய உயர்மட்டக் குழு அமைக்க அரசுக்கு உத்தரவிடுக : உச்சநீதிமன்றத்தில் மனு!!