தனியார் நிறுவன பால் லிட்டருக்கு ரூ.2 குறைப்பு: தயிர் விலையிலும் 8 ரூபாய் ‘கட்’

சென்னை: தனியார் நிறுவனமான ஹட்சன் பால் விலையை லிட்டருக்கு ரூ.2ம், தயிர் கிலோவுக்கு ரூ.8ம் குறைத்துள்ளது. ஆவின் நிறுவனம் 4.5 சதவீத கொழுப்பு சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை நிற பாக்கெட்) உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக 3.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள ஆவின் டிலைட் பாலினை(ஊதா நிற பாக்கெட்) அதே விலைக்கு விநியோகம் செய்ய உள்ளது. இந்நிலையில் முன்னணி தனியார் பால் நிறுவனமான ஹட்சன்(ஆரோக்யா) 4.5 சதவீத கொழுப்பு சத்துள்ள பாலுக்கு லிட்டருக்கு ரூ.2ம், தயிர் ஒரு கிலோவுக்கு ரூ.8ம் விற்பனை விலையை குறைப்பதாகவும், விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் முகவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இது குறித்து பால் முகவர்கள் கூறுகையில், தமிழகத்தில் பால் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் பால் கொள்முதல் விலை கனிசமாக குறைந்துள்ளதால் இந்த விலை குறைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஹட்சன் நிறுவனத்தின் விலை குறைப்பை தொடர்ந்து தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த மற்ற முன்னணி தனியார் பால் நிறுவனங்களும் பால், தயிர் விற்பனை விலையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் உற்பத்தி, விற்பனை நிறுத்தப்பட்டால் மக்கள் தனியார் நிறுவன பாலை வாங்கவே அதிகம் வாய்ப்புள்ளது என்றனர்.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை