தனியார் பள்ளி முதல்வர்களை பொதுத் தேர்வு முதன்மை கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யத் தடை; தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தனியார் பள்ளி முதல்வர்களை பொதுத் தேர்வு முதன்மை கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு பிற பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர்களை கண்காணிப்பாளர்களாக நியமிக்க வேண்டும். அதே பள்ளி தலைமை ஆசிரியர்களை முதன்மை கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யக் கூடாது. 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அரசு தேர்வுத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அரசு உதவிபெறும் பள்ளி முதல்வர்களை முதன்மை கண்காணிப்பாளர்களாக நியமிக்கலாம் என அரசு தெரிவித்திருக்கிறது.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!