தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 11 சவரன், பிளாட்டினம் திருட்டு

பெரம்பூர்: கொடுங்கையூரில் விக்டோரியா ஆர்.சி என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு வசித்து வருபவர் தேவி (40). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்றுமுன்தினம் மதியம் சூரப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தனது மகளின் 12ம் வகுப்பு சான்றிதழை வாங்கி வருவதற்காக கிளம்பி சென்றார். அப்போது, தனது 11 சவரன் வளையல்கள் மற்றும் பிளாட்டினம் கம்மலை, அலங்கார மேசை மீது வைத்துவிட்டு சென்றுள்ளார். மாலையில், வீடு திரும்பியபோது, நகைகள் திருடுபோனது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர், இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், தேவி வெளியே சென்றிருந்த நேரத்தில் அவரது மகள் வீட்டில் இருந்துள்ளார் என தெரிய வந்தது. மேலும் குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பில் செக்யூரிட்டியை மீறி வெளியாட்கள் யாரும் உள்ளே வர முடியாது. அதனால் போலீசார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள யாரேனும் கைவரிசை காட்டினார்களா அல்லது வேறு ஏதாவது பிரச்னை உள்ளதா என கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை நீட்டிப்பு

பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளரின் மகன் கைது

தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது