தனியார் பள்ளிகளில் அனுமதி பெறாமல் NCC முகாம்கள் நடத்தினால் கடும் நடவடிக்கை

கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் நடைபெற்ற என்.சி.சி. முகாமில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றச் செயலில் ஈடுபட்ட நபர் கைதுசெய்யப்பட்ட நிலையில், போலியாக என்.சி.சி. முகாம் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி சம்பவத்தின் எதிரொலியாக அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் N.S.S., N.C.C. SCOUT , GUIDE மற்றும் JRC போன்ற அமைப்புகள் செயல்படுகின்றன.

அந்த அமைப்புகளை பள்ளிகளில் செயல்படுத்த மாநில அமைப்பிடம் முறையாகப் பதிவு செய்து அனுமதி பெற்றிருக்கவேண்டும். அமைப்புகளின் செயல்பாடுகளைச் செயல்படுத்த மாநில அமைப்பு மூலம் முறையாகப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பள்ளியில் இருத்தல் வேண்டும். முறையாகப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் எந்தவொரு அமைப்பும் பள்ளியில் செயல்படக்கூடாது. மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்கள் மூலமாகவும், மாணவிகளுக்குப் பெண் ஆசிரியைகள் மூலமாகவும் மட்டுமே பயிற்சிகள் வழங்க வேண்டும். அப்படி மாநில அமைப்பிடம் அனுமதி பெறாமல் முகாம்களை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிச்சாமி எச்சரித்துள்ளார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு