தனியார் பள்ளி கட்டண நிர்ணய குழு ஆய்வு செய்யலாம்: ஐகோர்ட்

சென்னை: தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதை சரிபார்க்க தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய குழுவுக்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் ஆசான் நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவி ரூ.76,275-ஐ 12% வட்டியுடன் செலுத்த மாணவியின் பெற்றோருக்கு உத்தரவிடக் கோரி பள்ளி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. வழக்கில் பள்ளி நிர்வாகம் வழங்கும் வசதிகளுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கிறதா என ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பள்ளி நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. ரூ.50ஆயிரத்தை அக்டோபர்.18-க்குள் செலுத்திவிடுவதாக மாணவியின் தந்தை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் வைக்கப்பட்டு பள்ளியின் கட்டண விவரங்களை சரிபார்க்க பிறப்பித்த உத்தரவையும் சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

Related posts

அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்ற கதர் கிராமத் தொழில் வாரியத்தின் முன்னேற்றத்திற்கான ஆய்வுக் கூட்டம்

ஈரோட்டில் கோயில் வளாகத்தில் 10 பைக்குகள் தீயில் எரிந்து நாசம்: போலீசார் விசாரணை

ரயிலில் கடத்திய ரூ.28 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது: ஆந்திராவை சேர்ந்தவர் கைது