தனியார் பள்ளி பேருந்தில் கேனில் இருந்த ஆசிட் கசிந்தது: பேருந்துக்குள் இருந்த 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி பேருந்து பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு இன்று காலை பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது கழிவறைகளை சுத்தம் செய்வதற்காக எடுத்து செல்லப்பட்ட ஆசிட்களை மாணவர்களை பயணிக்கும் பேருந்தில் கொண்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் சின்னசேலம் அம்சகுளம் அருகே சென்றபோது வேகத்தடையில் பேருந்து ஏறி இறங்கியபோது பேருந்தில் வைக்கப்பட்டிருந்த கேனிலிருந்து ஆசிட் கசிந்துள்ளது.

ஆசிட் கசிந்ததின் காரணமாக பேருந்தில் பயணம் செய்த 18க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சில மாணவர்களுக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டுள்ளதால் அவர்களை தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வருவாய் துறை வட்டாட்சியர் கமலக்கண்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் உள்ளிட்டோர் மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களின் உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும் பள்ளி வேனில் ஆசிட் கொண்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Related posts

அரியானா கல்வித்துறையில் மோசடி 4 லட்சம் போலி மாணவர் சேர்க்கை: 5 ஆண்டுக்கு பின் சிபிஐ வழக்குபதிவு

திருச்சியில் புதிய தில்லை மெடிக்கல் சென்டர்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வாங்கல் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு!